Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Monday, Nov 23, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPolitics

ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்

Shahny Mohamed
Last updated: November 19, 2026 12:37 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

2028-2032 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட இந்நாட்டின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இரு கட்டங்களாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இந்நாட்டின் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் முக்கிய தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை தொடர்ந்து முன்னோக்கிகொண்டு செல்வது போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இணையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை நோக்கியும், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நீண்டகால கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

நிர்வாக மற்றும் கொள்முதல் செயல்முறைகளை முறைப்படுத்துதல், முதலீடுகளுக்கான அதிகாரத்துவத் தடைகளை நீக்குதல், அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் அரச துறையின் செயல்திறன் மற்றும் சேவை வழங்குதலை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை பிரதிநிதிகள் குழு இங்கு வலியுறுத்தியது. அரசாங்க தரவுக் கட்டமைப்புகள், நிறுவன திறன்கள் மற்றும் வருமான நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் இந்த கலந்துரையாடலில் முன்னுரிமைகளாக அடையாளம் காணப்பட்டன.

More Read

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

காலநிலை மீள்திறன், அனர்த்த அபாயத்தைக் குறைத்தல், விவசாய நவீனமயமாக்கல், உணவுப் பாதுகாப்பு, இலக்கு மையப்பட்ட சமூகப் பாதுகாப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதுமையடைந்து வரும் மக்களுக்கான தயார்நிலை ஆகியவை, ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்ட ஏனைய முன்னுரிமைத் துறைகளாகும்.

ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின், சிறிய அளவிலான தனித்தனித் திட்டங்களுக்குப் பதிலாக, உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், இருக்கும் அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், ‘ஒரு பிரிவாக செயல்படுதல்’ (Delivering as One) என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு வளங்களைத் திரட்டும் முறைகளாக, கலப்பு மற்றும் சலுகை நிதி வசதிகள், காலநிலை நிதிகள் மற்றும் அரச-தனியார் கூட்டாண்மை உள்ளிட்ட நவீன நிதியளிப்பு முறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

More Read

ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!
தபால் சேவை வருமான இலக்கைத் தாண்டியது
வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..
முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தில்!

2028-2032 புதிய ஒத்துழைப்புச் சட்டகமானது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணங்குவதை உறுதிசெய்து, தொழில்நுட்ப நிபுணத்துவம், நிறுவனத் திறன் உருவாக்கம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவினர் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் Marc-André Franch தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவில், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த Azam Bakeer Markar, ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) தூதுக்குழுத் தலைவர் Kristin Parco ஆகியோர் உள்ளடங்குவர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வைத்தியர்கள் அல்லாத 40,000 பேர் மருந்துகளை விநியோகிப்பதாக வௌிப்படுத்தல்!
Next Article 33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

Local Politics

மஹவையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Local இலங்கை

ஜனவரியில் உச்சத்தை அடையவுள்ள எல்-நினோ நிலைமை!

Local Politics

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!

Local Politics

அநுராதபுரத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி தெரிவிப்பு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.