(நமது நிருபர்)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அரச புலனாய்வுச் சேவையின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய எச்.கே. ஆர். பெர்ணான்டோ பொலிஸ் விசேட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய டபிள்யூ.யூ.கினிகே மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தலைவராகப் பணியாற்றிய கே.ஏ.ஜே.கொடித்துவக்கு பொலிஸ் நலன்புரி பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கேகாலை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஓஷன் ஹேவாவிதாரண யாழ்ப்பாணப் பொலிஸ்; பிரிவுக்கும் யாழ்பாணப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜீ.எச். மரப்பன களுத்துறைப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறைப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய டபிள்யூ.ஜே.பத்மினி கேகாலைப் பிரிவுக்குட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரியவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
