டிஜிட்டல் திரையை கொண்ட இலத்திரணியல் சாதனங்களை நாளான்றில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மாத்திரமே சிறுவர்களுக்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பேராதனை வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டொக்டர் சயுரி பெரேரா தெரிவிக்கிறார்.
கண்டி மஹிந்த ராஜபக்ஸ உள்ளக அரங்கில் நேற்று (நவ.21) நடைபெற்ற EXCLE Montessori Schoolன் வருடாந்த சிறுவர் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் திரையை கொண்ட இலத்திரணியல் சாதனங்களையும் 20 நிமிடங்கள் மாத்திரமே சிறுவர்களுக்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
சிறுவர்கள் மத்தியில் சிறிதாக ஆரம்பமான டிஜிட்டல் திரையுடனான பிரச்சினை, இன்று பாரிய பிரச்சினைகாக உருவெடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக டிஜிட்டல் திரையுடனான பிரச்சினையானது, இன்று தொற்று நோய்யை போல மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
“பெற்றோர் என்ற விதத்தில் எம்மால் தொலைபேசி இல்லாமல் இருக்க முடியுமா?. தொலைபேசியை அடிக்கடி தேடுவோம். சிறிது நேரத்தில் தொலைபேசியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு தோன்றும். Facebook, Whatsapp ல் எதாவது தகவல் விடுப்பட்டிருக்குமோ என்று நாம் பயப்படுவோம். Facebook உள்ளிட்டவை மோசம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனாலும், காட்டுப்பாடு இருக்க வேண்டும். எனது பிள்ளைக்கு தொலைபேசியில் அனைத்தும் முடியும் என்று சொல்லும் பெற்றோரை நான் சந்தித்துள்ளேன். அது சிறந்த திறமை என்று சொல்லுவார்கள். ஆம், அதுவொரு திறமை தான். ஆனாலும் வைத்தியர் என்ற விதத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளிம் தொலைபேசியை வழங்க வேண்டாம். குறிப்பாக இணையத்தளத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசியை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம். சமூக வலைத்தளங்களில் உள்ள விடயங்கள் குழந்தைகளின் பார்வைக்குப்படக்கூடாது. குழந்தை ஒன்றுக்கு தொலைபேசியை கொடுத்தால் அதை மீண்டும் எடுக்க முடியாது. மனநல வைத்தியர்கள் என்ற விதத்தில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளோம். 16 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு தொலைபேசியை கொடுக்க வேண்டாம். பாடசாலை வேலைகள் என்று சொல்லி whatsapp ல் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றார்கள். அதை இயலுமானளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என டொக்டர் சயுரி பெரேரா தெரிவிக்கிறார்.
“டிஜிட்டல் திரையை காண்பிக்க வேண்டாம்”
சிறுவர்களுக்கு டிஜிட்டல் திரைகளை காண்பிக்க வேண்டாம் எனவும் மனநல வைத்திய நிபுணர் டொக்டர் சயுரி பெரேரா பெற்றோரிடம் கேட்டுக் கொள்கிறார்.
“சிறு குழந்தைகளுக்கு எந்தவொரு திரையையும் காண்பிக்க வேண்டாம். திரை என்றால், தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட அனைத்தும் திரைகளுக்குள் உள்ளடங்கும். இந்த வயது குழந்தைகளுக்கு நாளான்றில் அதிகப்பட்சமாக 20 நிமிடங்கள் மாத்திரமே திரை ஒன்றை காண்பிக்க வேண்டும். தயவு செய்து திரைகளை காண்பிக்க வேண்டாம். அதை தவிர்த்து கொள்ளுங்கள். முடியுமானளவு விளையாட்டுக்களில் ஈடுபடுத்துங்கள். கலைகளில் ஈடுபடுத்துங்கள்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



