Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Localஇலங்கை

1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

Shahny Mohamed
Last updated: November 22, 2026 6:30 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதற்காக 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்துக்காக சுமார் ரூ. 1,600 மில்லியன் நிதி செலவிடப்பட்ட போதிலும், இதுவரை 22 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (COPA) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் அரசாங்கக் கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் தலா 3 தேசியப் பாடசாலைகள் வீதம் மொத்தம் 1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்ததாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் முழுமையாகக் கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்காக 802 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!

ஒவ்வொரு பாடசாலைக்கும் பௌதிக வளங்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபாயும், ஏனைய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய ஒரு மில்லியன் ரூபாயுமாக மொத்தம் 2 மில்லியன் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, 802 பாடசாலைகளுக்கும் ஏறத்தாழ ரூ. 1,600 மில்லியன் வரை கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், 2023ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிதி வழங்கப்பட்ட 802 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் எவ்வித முறைகேடுகளோ பிரச்சினைகளோ கண்டறியப்படவில்லை என நாலக களுவெவ சுட்டிக்காட்டினார்.

More Read

பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்
ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!

பௌதிக வள மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதியில் மதில் சுவர், நுழைவாயில் மற்றும் பெயர்ப்பலகை அமைத்தல் போன்ற பணிகள் பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை இன்றும் காணக்கூடியதாக உள்ளதுடன், தேவையான உபகரணங்களும் முறையாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2025ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், மேலதிகப் பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தும் எண்ணமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அதாவது 396 பாடசாலைகளுக்கு மேல் தேசியப் பாடசாலைகளாக மாற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனக் குறிப்பிடப்பட்டது.

அதன்படி, திட்டமிடப்பட்ட 802 பாடசாலைகளில் 22 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக ஏற்கப்பட்டுள்ளன என்றும், தற்போதுள்ள 396 தேசியப் பாடசாலைகளில் புதிதாக இணைக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளும் உள்ளடங்கும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
Next Article டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local Politics

மஹவையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Local இலங்கை

ஜனவரியில் உச்சத்தை அடையவுள்ள எல்-நினோ நிலைமை!

Local Politics

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!

Local Politics

அநுராதபுரத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி தெரிவிப்பு

Local Politics

மஸ்கெலியாவில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.