Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Monday, Nov 23, 2026
Hot News
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?
நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்
ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

ம்பவம், ஒரு தாயாக தனக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும்! அமைச்சர் கருத்து!

Shahny Mohamed
Last updated: November 15, 2026 12:51 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

நக்கிள்ஸ் மலைத் தொடர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் பச்சிளம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்க தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தலையீடுகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் செயற்படுத்துமாறு தொடர்புடைய பிரிவுகளுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நக்கிள்ஸ் பிரதேசத்திலிருந்து பதிவான, 15 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பாதுகாப்பற்ற பிரசவத்தின் பின்னர் குழந்தையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், ஒரு தாயாக தனக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

இச்சம்பவத்தை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக கருதவில்லை எனவும், தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக குழந்தைகள் வெவ்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வழிகளிலும் பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆளாகிறார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

அதுமாத்திரமன்றி, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர உறவும் தொடர்பாடலும் கிரமமாக நழுவிச் செல்வதும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமான முக்கிய காரணியாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Read

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!
பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?
ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்
கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

இதனால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவர்களின் மிக நெருக்கமான சூழலிலேயே அவர்கள் பாதுகாப்பற்ற தன்மைக்குள்ளாகும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

எந்தச் சூழ்நிலையிலும், “எங்கள் பெற்றோரிடம் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்ற உறுதியான நம்பிக்கையைச் பிள்ளைகளிடம் கட்டியெழுப்பப் பெற்றோராக அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடும்பத்தினுள் அத்தகைய பாதுகாப்பான சூழலையும் திறந்த உரையாடலையும் உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற ஆபத்தான மற்றும் மனவேதனை தரும் சம்பவங்கள் ஏற்படுவதைப் பெரும் அளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

More Read

ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!
வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..
முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தில்!
மஹவையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

அத்துடன், இத்தகைய சூழ்நிலைகளில் ஆபத்துக்குள்ளானவர்கள் அல்லது பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆளானவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படும் மற்றும் தலையீடு செய்யும் அனைத்துத் தரப்பினரும், அரச நிறுவனங்களும் மக்களுடன் மிகவும் நெருக்கமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக மாற வேண்டும் என்ற செய்தியையும் இச்சம்பவம் வழங்குவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவிக்கிறார்.

இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் குறித்து நீண்டகால அடிப்படையில் கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற தன்மைக்குள்ளாகும் குழந்தைகளுக்காக முறையான தீர்வாக 2027 ஆம் ஆண்டு முதல் புதிய “மாற்றுப் பாதுகாப்புக்கொள்கையை” செயற்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கான அவசியமான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்பதால், நாட்டின் குழந்தைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமாகவும் கவனமாகவும் செயற்படுமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article நான்கு மணி நேரத்தை தாண்டிய வரவு செலவு திட்ட உரை!
Next Article இராமேஸ்வரம் பாலத்தையும் அமையுங்கள்! -ஹக்கீம் கோரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

ஜனவரியில் உச்சத்தை அடையவுள்ள எல்-நினோ நிலைமை!

Local Politics

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!

Local Politics

அநுராதபுரத்தில் இராமர் கோயில் அமைக்கும் திட்டம் இல்லை – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி தெரிவிப்பு

Local Politics

மஸ்கெலியாவில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Local Politics

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச ஊழியர்கள் போராட்டம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • Breaking
  • இலங்கை
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.