தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் அரசாங்கம் கட்டுக்கோப்பான ஒரு வளர்ச்சியடைந்த அபிவிருத்தியடைந்த வளமான நாடாக மாற்றும்; தேசிய கொள்கை ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் இதை சீரழிக்க செயல்படும் அறிவு கெட்ட ஊழல்வாதிகள் கனவுகள் நனவாகவில்லை என இருக்கின்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளுடன் சில தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுத்துள்ளனர். இதில் மக்களுக்கு உடன்பாடு கிடையாது என தேசிய மக்கள் சக்தி எம்.பி கந்தசாமி பிரபு தெரிவித்தார் .
வரவு செலவு திட்டம் தொடர்பாக திங்கட்கிழமை (23) இடம்பெறவுள்ள தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஞாயிற்றுக்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருக்கின்றார் அந்த வகையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார் 2025,2026 வரவு செலவு திட்டம் சமர்ப்பித்துள்ளோம் தற்போது 2027 வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்அரசுச் செய்திகள்
தொடர்ச்சியாக இந்த நாட்டின்; பொருளாதார வளர்ச்சியான வரவு செலவு திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம் இன்னும் இரண்டு வரவு செலவு திட்டம் எங்கள் ஆட்சி காலத்தில் இருக்கின்றது.
பாரியளவிலான நிதி தேவைகளை கொண்ட அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடும் போது அந்த வருடத்துக்கு ஊடான ஒட்டுமொத்த நிதியை பயன்படுத்தாமல் தொடர்ச்சியாக 2027,2028,2029 காலங்களில் பூர்தி செய்ய கூடியதான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
அரச வருமான, வரி வருமானம் மற்றும் வரி தவிர்ந்த ஏனைய நிதியத்தின் ஊடாக வரும் வருமானம் இன்று அதிகரித்துள்ளதுடன் தொடர்ச்சியாக ஒரு ஊழல் மோசடி இல்லாத திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் அதன் காரணமாக வரவு செலவு திட்டத்தில் வருமான பிரதியை பார்க்கும் போது தொடர்ச்சினான ஒரு அதிகரிப்பை காட்டுகிறது.
ஆகவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான துவக்க புள்ளியாக அந்த வரவு செலவு திட்டம் அமைந்திருக்கும் அதுமட்டுமல்ல நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கும் நோக்காக கொண்ட திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம்.
ஆகவே இதன் நோக்கம் தெளிவாக சர்வதேச நாடுகளுக்கு புரிந்திருக்கிறது இங்கே இருக்கின்ற அறிவு கெட்ட ஊழல்வாதிகளுக்கும் இந்த நாட்டை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற இந்த அரசியல்வாதிகள் தங்களது கனவுகள் நனவாகவில்லை என்ன கவலையுடன் இருக்கும் கீழ்தரமான இந்த அரசியல்வாதிகள் மக்களை குழப்புகின்ற அதேநேரம் சில தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து கொண்டு இந்த தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக இந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகவே தொழிலாளர்கள் வர்கத்தில் இருந்து வந்த ஒரு ஆட்சியாளர்கள் தான் நாங்கள் ஆகவே இந்த தொழிலாளர்களுக்கு என்ன வரப்பிரசாதங்களை வழங்க முடியும் அவை அனைத்தையும் நாங்கள் செயற்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
வருமான ஏற்றத்தாழ்வு இருக்கிறது அவர்களது சம்பளம் சார்ந்த விடயங்களில் முறைமைகள் சரியாக பின்பற்றப்படவில்லை ஏற்றத்தாழ் வாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது இது நாங்கள் கொண்டு வந்த விடயம் அல்ல.
இன்று எந்த தொழிற்சங்க நடவடிக்கையும் எடுபடாது தொடர்ச்சியாக உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு வழங்கி இருக்கிறோம் 2025, 2026 வழங்கியிருந்தோம் 2027 சம்பள உயர்வு வழங்கவுள்ளோம் ஆகவே அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு தொடர்பான விடயங்களில் முரண்பாடு இருக்கிறது அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போக்கு வரத்துக்கு செலவுக்கு இதுவரை காலமும் 300 ரூபா வழங்கப்பட்டிருந்தது இப்போது நாங்கள் ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம் எனவே படிப்படியாகத்தான் அதிகரித்துக் கொள்ள முடியும்.
பொருளாதார வளர்ச்சியில் மக்களின் நலனையும் நாங்கள் சிந்திக்க வேண்டும் அத்துடன் விலைவாசிகள், வெளிநாட்டு முதலீடுகளை கவருவது தொடர்பாகவும்; வருமானம் வரக்கூடிய முதலீடுகள் தொடர்பாக சிந்திக்க வேண்டும் இப்படி பல விடயங்களை ஒன்றினைத்து தான் தீர்மானிக் வேண்டியுள்ளது.
ஆகவே இவர்கள் முன்னெடுக்கின்ற குழப்புகின்ற இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் எப்போதும் ஆதரவளிக்கப் போவதில்லை மக்களுக்கு தெளிவாக தெரியும் வளைகுடா நாட்டில் இன்னும் யுத்தம் இடம் பெற்றுறுவருகின்றது ஆதலால் எரிபொருளுக்கான விலைவாசி அனைத்து நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
இருந்தாலும் எங்கள் மக்கள் தாங்கக்கூடியதாக விலைவாசிகள் வழங்கி வருகிறோம் இதற்கு மேலதிகமாக அரச நிதியை பயன்படுத்தி மானியங்களை எரிபொருளுக்கு வழங்கி ஒரு கட்டுப்பாடான ஒரு நிலைக்குள் மக்கள் தாங்க கூடிய அளவிற்கு விலைவாசிகள் கூடியுள்ளோம்.
கடந்த கால ஆட்சியாளர்கள் போல் விலைவாசிகளை நாங்கள் தீர்மானிக்கவில்லை மக்களை கஸ்ப்படுத்தாத வரைக்கும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கையை முன்னெடுக்கிறோம்.
எதுவாக இருந்தாலும் எதிர்கட்சியினர் செயற்படுகின்ற அவர்களின் கருத்துக்களில் மக்களுக்கு உடன்பாடு கிடையாது அவர்கள் இந்த அரசை நம்புகின்றனர் மக்கள் ஆதரவளித்து அரசு உருவானது எனவே தொழிலாளர் வர்க்கத்தின் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளது இதனூடாக இந்த நாட்டை கட்டுக்கோப்பான ஒரு வளர்ச்சியடைந்த அபிவிருத்தியடைந்த வளமான நாடாக மாற்றும் எங்கள் தேசிய கொள்கை ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் வெகு விரைவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வெளிப்படையாக கண் ஊடாக காணக்கூடியதாக இருக்கும் என்றார்.
