என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen Huang) அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மீண்டும் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளதாவது,
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குப் பணிப்பாளர் சபை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக என்விடியா (Nvidia) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியாவை வழிநடத்த ஜென்சன் பொருத்தமானவர் எனப் பணிப்பாளர் சபை நம்புகிறது.
மேலும், அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது எமது பங்குதாரர்கள், ஊழியர்கள், பங்காளார்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கு உகந்தது எனப் பணிப்பாளர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சந்தேகத்திற்கிடமான உளவாளி ஒருவருடனான உறவு உட்பட, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இதனையடுத்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதை குறித்த நிறுவனம் முன்னதாக திட்டவட்டமாக நிராகரித்தது.
ஜென்சனுக்கு ஆதரவாக பில்லியனரான ஈலோன் மஸ்க் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்த நிலையில், தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
