Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 21, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

Shahny Mohamed
Last updated: November 21, 2026 9:43 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

அரசியல்வாதிகளுக்கான நிவாரண வழங்கல் நிதியமாக செயற்பட்ட ஜனாதிபதி நிதியம் தற்போது நடுத்தர மக்களுக்கான நிதியமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் பலர் நீதிமன்றத்துக்கு செல்ல நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியினர் மிகவும் வேதனையடைந்து தற்போது பல குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. பரம்பரை ஆட்சி அலகு நடுத்தர மக்களால் புதிய தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தை எவ்வழியிலாவது. நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More Read

செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தால் பயனடைந்த தரப்பினர் இன்று பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

ஜனாதிபதிக்கான செலவினத்துக்கு இம்முறை 11 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 65 ஆயிரம் மில்லியன் ரூபா க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை போன்று ஜனாதிபதியின் தனிப்பட்ட தேவைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தனது தனிப்பட்ட தேவைக்காகவோ அல்லது கட்சியின் நடவடிக்கைகளுக்காவோ இந்த நிதியை ஒதுக்கவில்லை. மக்களின் அபிவிருத்தி மற்றும் நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவே 11 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

More Read

சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு 52 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் வரிப்பணம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகிறது. நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியில் வைத்துக் கொண்டு ஜனாதிபதி சுகபோகமாக வாழவில்லை. கடந்த கால வர செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான செலவீன ஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கும், அவரது குடும்பத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. அவ்வாறான தன்மை தற்போது கிடையாது.

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. தற்போது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் நலன் நிதியமாகவே ஜனாதிபதி நிதியம் செயற்பட்டது. முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகியோர் நிதி பெற்றார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் எவருக்கும் நிதியளிக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு 1 இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 5000 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதியுதவியளிக்கப்பட்;டுள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் திறன் வெளிப்படுத்தல் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர மக்களுக்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் பலர் நீதிமன்றத்துக்கு செல்ல நேரிடும்.

கடந்த இரண்டு ஆண்டுக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது அரச நிறுவனங்களாகவும், நீதிமன்றங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

“சிறிமாவுக்கு ஜே.ஆர். செய்ததை நாமலுக்கு செய்ய வேண்டாம்” – அரசாங்கத்திற்கு தயாசிறி எச்சரிக்கை!

Just in Local

புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

Just in Local

பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க தீர்மானம்!

Just in Local

மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

Just in Local

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.