வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 70 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நடவடிக்கை வெற்றியளிக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) முக்கிய பங்காற்றி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
களுத்துறை, கட்டுகுருந்தையில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற 83 ஆவது பயிற்சி நெறியை நிறைவு செய்த வீரர்களின் வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
