Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?
செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!
OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுங்கள் – சஜித் பிரேமதாச!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 3:20 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுங்கள்.

இலங்கை கிரிக்கெட் சட்டம் குறித்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

முக்கிய ஆடவர் தொடர்களை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவில்லை என அண்மையில் சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின என அறியக் கிடைத்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ளும் தேவை எம்மத்தியில் காணப்படுகின்றன. உருவாக்கப்பட்டு வரும் இச்சட்டத்திற்குள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியுமுள்ளது. எனவே ஊடகங்களில் வெளியாகும் இவ்வாறான விடயங்களைச் சமூகமயப்படுத்தாமல் சரியான விளக்கத்தை முன்வைக்குமாறு நான் ஆலோசனை முன்வைக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்கு வீரர்களாகப் பங்களிப்புச் செய்த திறமையான பலர் காணப்படுகின்றனர். ஆதலால் வீரர்களைத் தெரிவு செய்யும் சமயங்களில் முன்னாள் வீரர்களுக்குத் திறந்த ஆலோசனைகளை பெற்றுத் தருவதற்கு வாய்ப்பளித்துத் திறந்த களமொன்றை தாபியுங்கள். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

More Read

கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இந்தோனேசியா மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – இது வரை 24 பேர் உயிரிழப்பு!
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வரைஞர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலகில் விளையாட்டுத் துறையில் சாதனை மேல் சாதனை படைத்த அணிகள் இருந்தன. அவற்றைப் பார்க்கும் போது 70-80 தசாப்தங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி திறமைக்கு முதலிடம் கொடுத்து முன்னேறின. திறமையான வீரர்கள் இருந்தபோதிலும் ‘அணி மனப்பான்மை இல்லை’ என்று கூறி அணியில் இணைத்துக் கொள்ளாத நிலை காணப்படுவதால், திறமைக்கு அதிக முன்னுரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பல வருடங்களாக ஒருசில குடும்பங்களும், குழுக்களும் அதிகாரத்தைச் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த அரசியல்மயமாக்கலை இல்லாதொழிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

More Read

செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 6 மாடி கட்டிடம் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

அத்துடன், கண்ணுக்குத் தெரியாத விடயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கண்கூடாகத் தெரியும் திறமை, ஆற்றல் மற்றும் ஓட்டங்களைக் குவித்தல் ஆகிய விடயங்களில் வீரர்களைத் தெரிவு செய்யும் போது கவனம் செலுத்துமாறும், கிராமப்புறங்களுக்கு எதிரான பாரபட்சமும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு மாத்திரம் ஆதரவான போக்கும் காணப்படுவதால், அவ்வாறான நிலைமைகளை விடுத்தும், இன மத பாராபட்சங்களை விடுத்தும், திறமையான வீரர்களுக்கு களம் கொடுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுவான வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டில் காணப்படும் அசுத்தங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அதற்கு இணங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் நாம் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி – பிரதமர் அறிவிப்பு
Next Article அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

Just in Local

இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!

Politics உலகம்

எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

Just in Local

சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!

Local Politics

இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.