வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பின்றி நேற்று திங்கட்கிழமை (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்குரிய செலவினத் தலைப்புகளும் திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
