Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 4:59 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும்.” – இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வெளிநாட்டு அமைச்சின் பிரதான நிதி ஒதுக்கீட்டில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்றாலும், போதிய நிதி வழங்கப்படாமையால் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. செலவுக்கு ஏற்ற பெறுமதி கணக்காய்வை முன்னெடுத்துத் தேவையற்ற தூதரகங்களை மூடிவிட்டு, அத்தியாவசியமானவற்றுக்கு முழுமையான நிதியை வழங்க வேண்டும். ஜோர்தான் போன்ற சிறிய நாடுகளுக்கான பதவிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, சீனா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய முக்கிய நாடுகளுக்கான தூதுவர்கள் பதவிகள் ஏன் இன்னும் வெற்றிடமாக உள்ளன?

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில், லக்ஷ்மன் கதிர்காமர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் போல், வெளிநாட்டுச் சேவையை அரசியல்மயமாக்கலிலிருந்து விடுவித்துத் திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். அமைச்சரின் சர்வதேச ரீதியான செயற்பாடுகளைப் பாராட்டுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் இலங்கைக்கு உரிய பங்கைப் பெற்றுக்கொள்ள வணிக இராஜதந்திரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

More Read

வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!
கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!
அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!

இலங்கையின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், இரண்டு ஆண்டுகால விண்ணப்ப அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுவது சலுகை கிடைப்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதம் அல்ல.

இந்தியாவுடனான மீனவர் பிரச்சினையை முழுமையாக இராஜதந்திர ரீதியாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். மீனவர் முரண்பாடுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்காது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தபோதிலும், பழமை ஹோட்டல்கள் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்புக் குறைபாடுகளால் இலங்கை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் வருமானம் 8 – 9 சதவீதம் அளவில் குறைவடைந்துள்ளது. குறைந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு 6.1 – 7.5 பில்லியன் டொலர் ஈட்டும் மாலைதீவுடன் ஒப்பிடுகையில், இலங்கை சுமார் 3 பில்லியன் டொலர் மட்டுமே ஈட்டுகின்றது. ஆகவே, நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் அரசு கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” – என்றார்.

More Read

வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!
முட்டை – கோழி இறைச்சி விலை அதிகரிப்பு: அமைச்சர் தலைமையில் தீர்மானம்!
Share This Article
Email Copy Link Print
Previous Article OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற – அமைச்சரவை அனுமதி!
Next Article நாட்டில் காற்றின் தரம் – ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!

Uncategorized

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!

Uncategorized

கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!

Uncategorized

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

Uncategorized

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.