Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 6:02 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும். இதற்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

More Read

சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் (Joint Working Group – JWG) கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இலங்கை தரப்பிலிருந்து கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பங்களிப்புடன் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More Read

ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இந்திய – இலங்கை கடற்றொழில் கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தியத் தரப்பிலிருந்து கடற்றொழில் செயலாளர் தலைமையிலான குழுவினர், கடற்படைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இக்கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரும் இவ்விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அனைத்து தரப்பினருடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்டுவதற்கு எமது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Next Article இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

Just in Local

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!

Just in

நாட்டின் மத்திய உயர் மலைப்பகுதிகளில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!

Just in Local

கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.