Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 6:38 pm
Shahny Mohamed
Share
1 Min Read
SHARE

சாதியைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் அறிவித்ததாக வெளியான ஊடகச் செய்திகளை அமைச்சரின் அலுவலகம் மறுத்துள்ளது.

இன்று (25) வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், சில ஊடக நிறுவனங்கள் அமைச்சரின் கருத்துகளை முற்றிலும் தவறான சூழலில் எடுத்துக்கொண்டு, தவறாக வழிநடத்தும் தலைப்புகளுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாள் தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தை விளக்குவதற்காக, நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து இந்தத் தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சாதி போன்ற சமூக அடிப்படையிலான நிபந்தனைகளைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

More Read

இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!

இத்தகைய விளம்பரங்கள் சமூகத்தின் சில பிரிவினரைத் துன்புறுத்தலுக்கும் பாகுபாட்டுக்கும் உள்ளாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், குறிப்பாக சமூக ஊடகங்களில் மூடநம்பிக்கைகள், வசியம் மற்றும் மாந்திரீக நடைமுறைகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் அதிகரித்து வருவதாகவும், இவை சமூகத்திலும் இளம் தலைமுறையினரிடத்திலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

More Read

ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைக் கோவையொன்றை உருவாக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களில் இத்தகைய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கியிருந்தார்.

“மக்களின் மனப்பாங்குகள் மாற வேண்டும். எந்தவொரு சமூகமும் பின்னோக்கிச் செல்லாமல், முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும்” எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும், அமைச்சரின் கருத்துகள் திருமண விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தையோ அல்லது எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கவோ, கேள்விக்குட்படுத்தவோ, தடை செய்யவோ வேண்டும் என்ற நோக்கத்தையோ எந்த வகையிலும் வெளிப்படுத்தவில்லை என அமைச்சரின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

Just in Local

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!

Just in

நாட்டின் மத்திய உயர் மலைப்பகுதிகளில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!

Just in Local

கினிகத்தேனையில் கனரக வாகனம் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.