Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!
முட்டை – கோழி இறைச்சி விலை அதிகரிப்பு: அமைச்சர் தலைமையில் தீர்மானம்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
தாய்லாந்து பிரதிப் பிரதமர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!
வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு!
முட்டை – கோழி இறைச்சி விலை அதிகரிப்பு: அமைச்சர் தலைமையில் தீர்மானம்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பைஸர் முஸ்தபா!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 1:31 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

‘‘இலங்கையை வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வழிநடத்திய சிறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்பது எவராலும் மறுக்க முடியாது. அவர் அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்ததோடு, சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டார். பிளவுபடாத வெளிவிவகார கொள்கையே இலங்கைக்கு சாதகமாக அமையும்’’ என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘தவறான வெளிவிவகாரக் கொள்கையினால் இலங்கை கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டது. இலங்கையை வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வழிநடத்திய சிறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்பது எவராலும் மறுக்க முடியாது. அவர் அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்ததோடு, சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டார்.

More Read

இலங்கையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் – முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை!
இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
அமெரிக்க தூதரகம்2 நாட்களுக்கு மூடப்படும்!
அனோஜனின் விடுதலைக்காக ஐ.நா.வழங்கிய பங்களிப்பு அளப்பரியது!

இலங்கையில் எமது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நாம் இதனை உணர்ந்துள்ளோம். சில நாடுகளுடனான குறிப்பிட்ட வெளிநாட்டு உறவுகளாலும் நடுநிலையான பாதையைப் பின்பற்றாததாலும் அரசாங்கங்கள் வீழ்ந்துள்ளன என்பதையும் நாம் அறிவோம்.

வெளிநாட்டுக் கொள்கை விடயத்தில் நாம் முயன்று தவறும்போக்கைக் கொண்டிருக்க முடியாது. இன்று நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சீனா இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல் தத்தளிக்கும் ஒரு கப்பலைப் போன்று நிலைமை உள்ளது. எனவே இது வழிநடத்துவதற்குக் கடினமான பாதையாகும்.

ஆயினும், எமது சர்வதேச வெளிநாட்டு உறவுகளைக் கையாள்வதில் நேர்மையாகவும் அனைவருக்கும் நியாயமாகவும் எவருக்கும் அடிபணியாமலும் செயற்பட்டால், இந்தக் கப்பலை எம்மால் வெற்றிகரமாக வழிநடத்த முடியும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கையாள்வீர்கள் என்று நாம் நினைத்தோம்.

More Read

வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
நேபாளத்தில் நிலநடுக்கம் – ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவானது!
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய 22 வயது யுவதி கைது!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை விமர்சித்தபோதிலும், இன்று விவேகம் மேலோங்கி, அந்தத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வது வரவேற்கத்தக்கது.

எமது வெளிநாட்டுப் பணியாளர்களை பற்றி ஆராய்கையில், இன்று இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமானோர் வெளிநாடுகளில் பணியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். சிலரால் அபராதத் தொகைகளைக் கூடச் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக சிறிது நிதியை ஒதுக்கியுள்ளார் என நான் நினைக்கிறேன். ஆயினும், அனோஜன் சம்பவத்துக்குப் பின்னர் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்; எமது இலங்கையர்கள் பல இடங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நிவாரணம் பெற முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களிடம் சொத்துகளோ பணமோ இல்லை.

இது தொடர்பாக நானும் ஒரு யோசனையை முன்வைத்திருந்தேன். எமது வெளிநாட்டுப் பணியாளர்கள் இலங்கைக்குப் பாரிய சேவையை ஆற்றுகிறார்கள் என நான் நினைக்கிறேன். எமது பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்குச் சட்ட நிவாரணம் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக சட்டமூலமொன்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிதியம் எமக்கு அவசியமாகும். ஏனெனில் இதுவொரு பாரிய பிரச்சினையாகும். சில நாடுகளில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதையும் சில பெண்களுக்குப் பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம்.

இத்தகைய பிரச்சினைகளின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தலையிடுவதுடன், எமது தூதரகங்களில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவுகளை வெளிவிவகார அமைச்சர் மேலும் வலுப்படுத்த வேண்டும்.

More Read

முட்டை விலை அதிகரிக்காது
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு

குறிப்பாக, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இரண்டரை இலட்சம் பணியாளர்கள் உள்ளனர். அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன்.

அதேபோன்று குறிப்பாக மத்திய கிழக்கில் எமது பணியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் அவசியமாகும். எனவே அந்தந்த அலுவலகங்களில் தேவையான உதவிப் பணியாளர்களை அதிகரிக்கும் பொறுப்பு உள்ளது’’ என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இம்ரான்கான் விவகாரம் – அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்த ரவூப் ஹக்கீம்!
Next Article எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்

Local Politics

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Local Politics

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்

Local Politics

பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

Local இலங்கை

டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Uncategorized
  • Sports
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.