வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைக்கான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, திருத்தங்கள் எதுவுமின்றி திங்கட்கிழமை (நவம்பர் 23) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளில் குறித்த நிதி ஒதுக்கீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலமும் (Prevention of Foreign Terrorist Fighters Bill), இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து, திருத்தங்கள் எதுவுமின்றி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
குறித்த விவாதம் திங்கட்கிழமை மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
