Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய 22 வயது யுவதி கைது!
கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!
முட்டை விலை அதிகரிக்காது
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய 22 வயது யுவதி கைது!
கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்
துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!
முட்டை விலை அதிகரிக்காது
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Localஇலங்கை

காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய 22 வயது யுவதி கைது!

Shahny Mohamed
Last updated: November 24, 2026 10:14 am
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

 

காதலனின் பணத் தேவைக்காக சொந்தத் தாயின் 8.5 பவுன் தாலிக்கொடியைத் திருடி ஈடு வைத்து விட்டு, உறவுக்கார பெண் ஒருவரை திருட்டு வலையில் சிக்க வைத்து நாடகமாடிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்பில் வௌியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 28-ஆம் திகதி தமது வீட்டிலிருந்த 8.5 பவுன் தாலிக்கொடி காணாமல் போனதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

More Read

கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் பலி!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு!
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 வரை இலங்கைக்குக் கிடைக்கும் :புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் உரிமைகளுக்கு பாதிப்பில்லை – விஜித்த ஹேரத்

இதையடுத்து, தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவுக்கார பெண் ஒருவரே இதனைத் திருடியிருக்கலாம் என வீட்டார் சந்தேகத்தைக் கிளப்பினர்.

More Read

துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 29இல் விசாரணைக்கு!
முட்டை விலை அதிகரிக்காது
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு

அதன் அடிப்படையில் குறித்த உறவுக்கார பெண்ணைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் தீவிர விசாரணைகளை நடத்தினர்.

எனினும் காணாமல் போனதாக கூறப்பட்ட நகை எதுவும் கிடைக்காத நிலையில், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.

பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். அப்பாவி உறவுக்கார பெண் சிறை சென்ற போதிலும், 4 மாதங்களை கடந்தும் உண்மை வௌிவரவில்லை.

​
இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

More Read

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்
இன்று தேசிய எதிர்ப்பு நாள்
எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

இதற்கிடையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் பொலிஸ் குழுவினர் நான்கு மாதங்களாக முடங்கியிருந்த இந்த பழைய வழக்கை மீண்டும் தூசி தட்டி தீவிர விசாரணையில் இறங்கினர்.

சந்தேகத்தின் அடிப்படையில், வீட்டின் உரிமையாளரின் மகளான தனியார் வங்கியில் பணியாற்றும் 22 வயது யுவதியிடமும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற அனுமதியுடன் குறித்த யுவதியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்ற பொலிஸார், வங்கிகளில் விசாரணை நடத்தினர்.

வங்கி ஆவணங்களை ஆய்வு செய்த பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த ஜூன் 28-ஆம் திகதி தாயின் தாலிக்கொடி திருட்டுப் போன நிலையில், இரண்டு நாட்களில் அதாவது ஜூன் 30-ஆம் திகதி அதே யுவதி தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தித் தனியார் வங்கி ஒன்றில் அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, உடனடியாக குறித்த யுவதியை நேற்று (23) பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தின் முழுப் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்தது.

தமது காதலனின் அவசர பணத் தேவைக்காகவே தாயின் தாலிக்கொடியைத் தாம் திருடி 14 இலட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடகு வைத்ததாகவும், அன்றைய தினமே காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் அந்த 14 இலட்சம் ரூபாயைக் கைமாற்றியதாகவும் கைதான யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் வீட்டாருக்கு தெரியாமல் இருப்பதற்காக உண்மையை மறைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் காதலன் தொடர்பிலும் அவருக்கும் இந்த திருட்டுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட யுவதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 7-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article கல்முனை, சாய்ந்தமருது நகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Local இலங்கை

டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை

Local இலங்கை

1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

Local இலங்கை

நடப்பாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழப்பு!

Local Politics

பொரளையில் சம்பவம் ; கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் கைது. – நடந்தது என்ன?

Local Politics

ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Breaking
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.