வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரசாங்கம் நடத்துவோம் என வாக்குறுதியளித்த மாகாண சபைத் தேர்தலை இன்றுவரை நடத்தவில்லை. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம் என பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (26) பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 அரசாங்கத்துக்கு அவர்கள் கூறும் விதமாக மக்கள் செல்வாக்கு காணப்பட்டால், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தலாமல்லவா?
மக்களின் ஜனநாயக உரிமைக்கு இடமளித்து, பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமும் ஜனரஞ்சகமானதாகவும் காணப்பட்டால், அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு மக்களிடையே ஆகர்ஷணம் இருந்தால், மாகாண சபைத் தேர்தல் எனும் லிட்மஸ் சோதனையை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலை நடத்தும் பட்சத்தில் பொதுத் தேர்தலில் கிடைத்த விசேட மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கத்தால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டம் முடிந்த உடனேயே மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள். பொய்க்கு தெரிவுக்குழுக்களை அமைத்து காலம் கடத்தாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.க
