Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி
ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
FCID யில் இருந்து வௌியேறினார் ரோஹித ராஜபக்ஷ!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!
வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

நெல் விவசாயத்தால் ஆலை உரிமையாளர்களே பயனடைந்தனர் – அமைச்சர் லால் காந்த!

Shahny Mohamed
Last updated: November 26, 2026 4:31 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

இலங்கையில் பல தலைமுறைகளாக நெல் விவசாயம் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், நெல் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பலமடையவோ வெற்றி பெறவோ இல்லை. மாறாக நெல் ஆலை உரிமையாளர்களே பயனடைந்துள்ளனர். விவசாயத்தை வெறும் உணவு உற்பத்தியாகப் பார்க்காமல் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் வாணிக விவசாயத்தை நோக்கி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் உயர் விளைச்சல் நெற்செய்கைக்கான தேசிய மாதிரித் திட்டத்தின் (சுப்ரி வி யாய) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனிமேலும் புதிய நெல் நிலங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படாது. தற்போதுள்ள நெல் நிலங்களில் ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டொன் வருவாய் பெறும் இலக்கை அடைவதோடு, நெல் வயல்களின் ஒரு பகுதியை குரக்கன், சோளம், தென்னை, கறுவா, வாழை, மாம்பழம், அன்னாசி மற்றும் பலா போன்ற மாற்று பயிர்களை பயன்படுத்த வேண்டும்.

More Read

ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!
16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – சஜித் பிரேமதாச!

குறிப்பாக, ஒரு ஏக்கர் வயல் நிலத்தில் எட்டில் ஒரு பகுதியில் குரக்கன் பயிர்ச்செய்கையை தொடங்கும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்குவிப்புத் தொகைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், நாட்டின் விவசாய உற்பத்திகளை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலான வணிக விவசாய அபிவிருத்தி திட்டத்தின் (CAD) மூலம், மாம்பழம், அன்னாசி, பலா மற்றும் வாழை போன்ற பயிர்களை நேரடியாக ஏற்றுமதியாளர்களுடன் இணைத்து, சந்தைப்படுத்தல் மற்றும் அறுவடை வீணாதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் நெல்லுக்கான உள்நாட்டு தேவை மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் நிலவும் சூழலில், விவசாயத்தை வெறும் உணவு உற்பத்தியாகப் பார்க்காமல் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் வாணிக விவசாயத்தை நோக்கி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

நாட்டின் ஊட்டச்சத்து நிலை குறித்து மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டிய அமைச்சர், இலங்கையர்களின் உணவுப் பழக்கத்தில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாகவும், புரதச்சத்து குறைவாகவும் காணப்படுவதாகக் தெரிவித்தார். இதனால் அரிசி நுகர்வைக் குறைத்து, புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகரிக்கும் வகையில் விவசாய உற்பத்திகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

More Read

எகிப்தில் எரிபொருள் தாங்கி விபத்து – 31 பேர் உயிரிழப்பு: 21 பேர் காயம்!
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
கஸ்ஸப்ப தேரர் நீதிமன்றில் ஆஜர்!

அத்துடன், தொடர்ச்சியான இரசாயனப் பயன்பாட்டினால் நாட்டின் மண் வளம் அழிந்துபோயுள்ளது. மண்ணிற்கு மீண்டும் உயிரூட்டும் கரிமப் பயன்பாட்டு முறைகள் அவசியமானவை. ஆய்வகங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் விவசாயத் தொழில்நுட்பங்களை விவசாய நிலங்களுக்கு விரைவாகக் கொண்டுசெல்ல வேண்டும். கரிமப் பிரிவு நிபுணர்கள் தங்கள் தொழில்நுட்பங்களை நிலத்தில் நிரூபித்துக் காட்ட களப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் 30 திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள், பொறுப்பேற்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் இருந்த அதிகாரிகளைக் கொண்டு பணிகளைச் சரியாக முன்னெடுக்க முடியாமல் போன போதிலும், தற்போது திறம்படச் செயல்படக்கூடிய ஒரு நிர்வாக இயந்திரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 30 நிறுவனங்களின் தலைவர்களுடனும் எவ்வித நிகழ்ச்சிநிரலும் இன்றி திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு, விவசாயத் துறையின் எதிர்கால மறுமலர்ச்சிக்கான புதிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க புதிய சட்ட ஏற்பாடுகள்!
Next Article ஐ.பி.எல் போட்டியின் 2027க்கு 1,220 வீரா்கள் பதிவு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Uncategorized

பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடையுடன் வந்த உறுப்பினர்கள்!

Uncategorized

கோட்டாவின் மேன்முறையீடு அடுத்த வருடம் விசாரணைக்கு!

Uncategorized

அரசாங்க தொழிற்சங்க தலைவர்கள் ‘துரோகிகள்’ – புபுது ஜாகொட பேச்சு!

Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தான புதிய சட்டம் வேண்டாம்.!

Uncategorized

வெளிநாட்டுத் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.