நிந்தவூர் கடல் பகுதியில் நீந்தச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
ஆபத்தில் இருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரை உள்ளூர்வாசிகள் மீட்டு நிந்தவூர் மருத்துவமனையில் சேர்த்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இரு இளைஞர்களும் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இரு இளைஞர்களையும் கண்டுபிடிப்பதற்காக, கடற்படை குழுக்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் நிந்தவூர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
