மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கும், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வரவு செலவுத் திட்டங்கள் பற்றி நூல் எழுதினால் நூலுக்கு ‘ பெலவத்தையில் இருந்து குருந்துவத்தைக்கு’ என்ற தலைப்பிட எதிர்பார்த்துள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நடுத்தர மக்களுக்கு வெறும் கானல் நீராகவே காணப்படுகிறது. வரி வருமானத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. பொருளாதாரம் முன்னேற்றமடைந்து விட்டது. திறைசேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் நகை அடகுகடைகளுக்கு முன்பாக நிற்கிறார்கள். இது தான் யதார்த்தம்.அரசுச் செய்திகள்
மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கும், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வரவு செலவுத் திட்டங்கள் பற்றி நூல் எழுதினால் நூலுக்கு ‘ பெலவத்தையில் இருந்து குருந்துவத்தைக்கு’ என்ற தலைப்பிட எதிர்பார்த்துள்ளேன்.
மத்திய கிழக்கின் மோதலை குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களிலும் உலகளாவிய ரீதியில் முரண்பாடுகள் காணப்பட்டன. அப்போது இந்தளவுக்கு வரிகள் விதிக்கப்படவில்லை. மக்கள் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வரி விதிப்பதையே அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் கம்பனிகள் மீது விதிக்கப்பட வேண்டிய வரிகள் நடுத்தர மக்கள் மீது 5 மடங்காக விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் தொடர்பில் மணிக்கணக்கில் பேசும் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்களுக்கு ஏதும் வழங்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. எந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் முதலில் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
