Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!
நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Tuesday, Nov 24, 2026
Hot News
பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
என்விடியா (Nvidia) CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!
நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPoliticsஇலங்கை

கடுவலை தீ விபத்து மரணங்களை அரசியலாக்க வேண்டாம் – மேயர் ரஞ்சன் ஜயலால் கண்டனம்

Shahny Mohamed
Last updated: November 22, 2026 2:52 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE

(எம்.மனோசித்ரா)

துயரமான மரணங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கடுவலை மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

கடுவலையில் தீவிபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

More Read

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்
இன்று தேசிய எதிர்ப்பு நாள்

நிகழ்ந்த உயிரிழப்புகளுக்காகக் கடுவலை மேயராகவும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை, கடுவலை மாநகர சபைக்குத் தீயணைப்புப் பிரிவு ஒன்றை அமைக்க கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த வாரம் கோட்டை மாநகர சபையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளோம். அதன்படி முதற்கட்டமாக கோட்டை மாநகர சபை தீயணைப்புப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த எதிர்க்கட்சியினர், மகாவலி திட்டம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறினாலும், தங்களது ஆட்சிக் காலத்தில் கடுவலை மாநகர சபைக்கு ஒரு தீயணைப்புப் பிரிவைக்கூட வழங்கவில்லை.

கடுவலை மாநகர சபை ஆட்சிக்கு வந்து ஓராண்டான நிலையில், தாங்கள் முன்வைத்த யோசனை மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி அரசியல் செய்வது அருவருக்கத்தக்கது.அரசியல் செய்திகள்

More Read

எதிர்காலத்தில் பொலிசாருக்கு கிடைக்கவுள்ள 5 முக்கிய வசதிகள்
பேலியகொடை மீன் சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
டிஜிட்டல் திரைகளினால் சிறுவர்களுக்கு பாதிப்பு – மனநல வைத்தியர் எச்சரிக்கை
1,000 தேசியப் பாடசாலைகள் கனவு; 22 மட்டுமே தரம் உயர்வு! – 2009ம் ஆண்டு திட்டத்திற்கு என்ன நடந்தது ?

கடுவலை பகுதியில் கடந்த காலங்களில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான கட்டட வரைபடங்கள் தரநிலைகளின்றி அனுமதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியில் தெரியப்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்பைக் கட்டடங்களில் அமைக்காமல் வரைபடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தங்களது கடந்த காலத் தவறுகளை மறைக்கவே மரணங்களை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.

மேலும், கடுவலை நகரத்தை முறைப்படுத்தப் பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹோமாகம மற்றும் மஹரகம ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது அபிவிருத்தித் திட்டத்திலும் தீயணைப்புப் பிரிவு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உடனடியாகச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ரணில் 1,010 மில்லியன் ரூபா – அநுர 31.7 மில்லியன் ரூபா – வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளியிட்ட அமைச்சர் நளிந்த!
Next Article ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

தபால் சேவை வருமான இலக்கைத் தாண்டியது

Local Politics

வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..

Local இலங்கை

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தில்!

Politics இலங்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

Local Politics

மஹவையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • Wolrd
  • இலங்கை
  • Breaking
  • Sports
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.