Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Saturday, Nov 28, 2026
Hot News
பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி
மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி : இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சந்தோஷ் ஜா
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.
3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
84 இலட்சம் ரூபா இலஞ்ச வழக்கு: சாமர சம்பத்தின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளரின் பிணைக் கோரிக்கை தள்ளுபடி!
எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
இலங்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது – கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

Shahny Mohamed
Last updated: November 28, 2026 10:25 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக் காணப்படுவதால் விலைகள் குறைவடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு உற்பத்தி காணப்படுவதுடன், தேவையான எந்தவொரு அளவையும் சந்தைக்கு விநியோகிக்கும் இயலுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனை ஈடுசெய்யப் போதியளவு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது எனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அஜித் குணசேகர, முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

More Read

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் பேச்சுவார்த்தை
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல – இம்ரான் எம்.பி.
3.6 கிலோ ஹெரோயினுடன் 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதாகவும், இந்த மாற்றத்தினால் முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கோழிப் பண்ணைகளை அண்மித்துப் பரவி வரும் சில வைரஸ் நோய்களும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடையத் தாக்கம் செலுத்தியுள்ளன.

தற்போது ஒரு முட்டை 39 முதல் 40 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நாட்களில் சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு ஏற்பவே முட்டையின் விலை தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைக் கணிசமாக அதிகரிப்பது கடினமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

More Read

எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை, ஹோமாகமவில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் பலி!
துறைமுக நுழைவாயில் மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி
காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

இது தொடர்பில் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவிக்கையில்:

“பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என நான் நினைக்கவில்லை. நாட்டின் தேவைக்குப் போதுமான கோழி இறைச்சி உள்ளது. டிசம்பர் மாதத்தில் கேள்வி அதிகரித்தாலும், அதற்குப் போதுமான பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலை பாரியளவில் உயராது.

ஆனால், முட்டைக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சோளத் தட்டுப்பாடு காரணமாக அதற்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதால் உற்பத்தி சற்று குறைந்துள்ளது. அதேபோன்று, சில வைரஸ் நோய்கள் பரவியமையாலும் நவம்பர் மாத மழையுடனான காலநிலையாலும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது ஒரு முட்டை 39, 40 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. சந்தையின் கேள்விக்கு அமையவே விலை தீர்மானிக்கப்படும். குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பது சற்று கடினமானது. எனவே, எதிர்வரும் காலங்களிலும் கால்நடைத் தீவன மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வர்த்தக அமைச்சர் இது குறித்துக் கலந்துரையாடி உரிய தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி
Next Article பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

பணத் தகராறில் பெண் படுகொலை – தப்பிச் சென்ற சந்தேகநபர் யானை தாக்குதலில் காயம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
இலங்கை

தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்

Politics இலங்கை

பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்

இலங்கை

பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!

Politics இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Local இலங்கை

போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!

  • Quick Links:
  • Local
  • Politics
  • Just in
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.