Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politicsஇலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Shahny Mohamed
Last updated: November 27, 2026 9:26 am
Shahny Mohamed
Share
4 Min Read
SHARE

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரத்துக்காக போராடியது . மக்கள் விடுதலை முன்னணி முழு நாட்டையும் கைப்பற்ற ஆயுதமேந்தி போராடியது.ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்கிறது. இது எந்தளவுக்கு நியாயமானது.இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடைகளை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும்.அப்போது தான் இந்த நாடு முன்னேற்றமடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

More Read

18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அநீதியான சட்டங்களை இயற்றி விட்டு அவற்றுக்கு எதிராக செயற்பட கூடாது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அவை இயற்கை சட்டத்துக்கு முரணான சட்டங்களாகும்.

இலங்கையின் சட்டமானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக தடை செய்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் தேசிய தலைவராக மதிக்கும் பிரபாகரனை நினைவுக்கூறவும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிப்பதும், அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதும், பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் தலைவரும்,போராளிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த அமைப்பு சார்ந்த எந்தவொரு விடயத்தையும் கொண்டாடவோ அல்லது நினைவுக்கூறவோ முடியாது என்று தொடர்ச்சியாக குறிப்பிடப்படுகிறது.

More Read

அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி

மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பும், அதன் தலைவர் ரோஹன விஜேவீரவுக்கும் ஒருகாலத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடை அமுலில் இல்லை.

விடுதலைப்பு லிகள் அமைப்பை தடை செய்து அந்த தடையை தொடர்ச்சியாக அமுலில் வைத்திருப்பதற்கும், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையை நீக்குவதற்கும் இடையிலான வேறுபாடு என்ன? இரு தரப்பும் ஆயுதமேந்தியே போராடின.போராட்டத்தின் போது உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

சரி, பிழைக்கு அப்பால் ஆயுதப்போராட்டம் பயங்கரவாதமாக கருதப்பட்டால் இரண்டு தரப்பும் தடை செய்யப்பட வேண்டும்.அல்லது ஜனநாயகத்தை வரவேற்று இரண்டு தரப்பு மீதான தடைகளையும் நீக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணி பிரச்சினையல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பு தான் பிரச்சினை என்றால் அதன் வித்தியாசம் என்ன ?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரத்துக்காகவே போராடியது.ஆனால் மக்கள் விடுதலை முன்னணி முழு நாட்டையும் கைப்பற்றவே ஆயுதமேந்தி போராடியது. முழு நாட்டையும் கைப்பற்றும் செயற்பாடு பயங்கரவாத செயற்பாடில்லையா,இது தான் இனவாதம். இந்த நிலைப்பாடு தான் நாட்டை இன்றும் பிளவுப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இரத்துச் செய்து மூன்று சட்டங்களை கொண்டுவரவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்பது ஒரு கொடிய விசப்பாம்பை போன்றது, அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும்,அதற்கு பதிலாக பிறிதொரு சட்டம் இயற்றப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

More Read

வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
16 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை இரத்துச் செய்வதாக வீதி வீதியாக சென்று குறிப்பிட்;ட ஆளும் தரப்பு இன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக மூன்று கொடிய விசப்பாம்புகளை உருவாக்க தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மிக கொடிய மோசமான அம்சங்கள் மூன்று சட்டமூலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை மறுதழிக்கும் ஒரு செயற்பாடாகும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம்,ஆகையால் அந்த சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மாவீரர் வாரத்தில் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் பலர் இந்த சட்டத்தை கொண்டு அச்சுறுத்தப்பட்டு ள்ளார்கள்.

பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.எமது கட்சியின் பொதுச்செயலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நினைவேந்தலுக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட முடியாது.

மக்கள் விடுதலை முன்னணி சிங்கள இனத்துக்காக போராடியது ஆகவே அதனை இனவாதம் என்று குறிப்பிட முடியாது தமிழ் மக்களுக்கான போராட்டத்தை ஏற்க முடியாது என்பதே இந்த அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது.

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் இவ்வாறான இனவாத செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலக வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் இனவாத போக்கில் செயற்பட்டதால் தான் இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.இருப்பினும் அந்த இனவாத போக்கில் இருந்து விடுபட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடைகளை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும்.அப்போது தான் இந்த நாடு முன்னேற்றமடையும் என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
Next Article பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!

Just in Local

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!

Local இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

Local இலங்கை

நோர்வுட் பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி உயிரிழப்பு!

Local இலங்கை

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் HIV தொற்று அதிகரிப்பு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.