முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளது.
சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
