இலங்கையில் 20 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கிறது.
இந்த ஆண்டில் மூன்றாவது காலாண்டு முடிவடையும் போது 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்டவர்களில் 88 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் 78 பேர், 20 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுணர் டாக்டர் மாதவி குணரத்ன தெரிவிக்கிறார்.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவடையும் போது, நாடு முழுவதும் மொத்தமாக 708 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் 1987ம் ஆண்டு அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அந்த எண்ணிக்கை 2026ம் ஆண்டாகும் போது 8,111 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இலங்கையில் HIV தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
