Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!
இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
தெதுரு ஓயா, விக்டோரியா, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
கஸ்ஸப்ப தேரர் நீதிமன்றில் ஆஜர்!
யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை
நோர்வுட் பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி உயிரிழப்பு!
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் HIV தொற்று அதிகரிப்பு
பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசேட நாடாளுமன்றக் குழுவை விரைவாக நியமிக்க வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
LocalPoliticsஇலங்கை

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்க – ஜனாதிபதி

Shahny Mohamed
Last updated: November 26, 2026 9:03 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும். நிதியாண்டின் ஆரம்பம் முதலே அமைச்சுக்களும் நிறுவனங்களும் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடன் உறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

More Read

சலேயின் அறிவுடன் மறைக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான கோப்பு!
இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை – சாணக்கியன்!
தெதுரு ஓயா, விக்டோரியா, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
யாழ்ப்பாணத்தில் கணவரைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

அவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் திறைசேரிக்குத் திரும்புவதால், அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு,மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், பெரும்போக நெல் அறுவடையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் களஞ்சியசாலைகளில் எஞ்சியுள்ள நெல் கையிருப்புகளை அடுத்த பெரும்போக அறுவடை கிடைப்பதற்கு முன்னர் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நெல் கையிருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வரிச் சலுகைகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போது முதலீட்டாளர் ஒருவருக்கு காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More Read

நோர்வுட் பகுதியில் கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி உயிரிழப்பு!
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் HIV தொற்று அதிகரிப்பு
பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசேட நாடாளுமன்றக் குழுவை விரைவாக நியமிக்க வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்
கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஐ.தே.க. மீது ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

எனவே, அரச காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலீட்டுச் சபையின் கீழ் அல்லது விசேட காணி வங்கியொன்றின் கீழ் ஒப்படைத்து, முதலீட்டின் அளவு, வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் துரிதமாகக் காணிகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Share This Article
Email Copy Link Print
Previous Article வைத்தியசாலை குறைபாடுகள், சுகாதார ஊழியர்களின் ஆடைப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்
Next Article கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஐ.தே.க. மீது ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!

Local Politics

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க

Just in Local

அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!

Just in Local

சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!

Local இலங்கை

இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.