Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Thursday, Nov 26, 2026
Hot News
இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா பிரதமரைச் சந்தித்தார்
இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வலுப்படுத்த வேண்டும் – காவிந்த ஜயவர்தன
சுகாதாரம், கல்வியை அடிப்படை உரிமைகளாக்குங்கள் – சஜித் கோரிக்கை!
“கானி” புயல் தொடர்பில் எச்சரிக்கை!
பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!
அரச ஊழியர்களின் போராட்டத்தில் இணைவது குறித்து GMOA 27-ஆம் திகதி முடிவு!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Politics

இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா பிரதமரைச் சந்தித்தார்

Shahny Mohamed
Last updated: November 26, 2026 2:22 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா பிரதமரைச் சந்தித்தார்உயர்கல்வித் துறைக்கு ஆற்றிய சேவைக்காக அண்மையில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரால் ‘நைட்’ (Knight) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, நவம்பர் 25ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவை மீண்டும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்ற பிரதமர், அவர் பெற்றுக்கொண்ட இக்கௌரவப் பட்டத்துக்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் படைத்துள்ள சாதனைகளையும் பாராட்டினார்.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாகக் கல்விசார் பங்காளித்துவங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இங்கிலாந்தின் கற்கை நெறிகளுக்கான அனுமதி மற்றும் உயர்கல்விப் பாதைகளைத் திறந்துவிடுதல் உள்ளடங்கலாக, இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்துப் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இதன்போது தெளிவுபடுத்தினார்

More Read

இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வலுப்படுத்த வேண்டும் – காவிந்த ஜயவர்தன
சுகாதாரம், கல்வியை அடிப்படை உரிமைகளாக்குங்கள் – சஜித் கோரிக்கை!
பணம் அச்சிடவில்லை – கடன் வாங்கவில்லை என்றால் பணவீக்கம் ஏன்?- ரவி கருணாநாயக்க கேள்வி!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்வித் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தையும், அதனைத் தேசிய கல்வி முறைமையுடன் மேலும் வலுவாக ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வி தொடர்பாக நிலவும் பாரம்பரிய மனப்பாங்குகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மேற்படிப்புக்கும் தொழில்வாய்ப்புக்குமான முக்கியமானதும் சமமான பெறுமதியைக் கொண்டதுமான ஒரு பாதையாகத் தொழிற்கல்வி அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மாறிவரும் உலகின் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான அறிவு, திறன்கள் மற்றும் தேர்ச்சிகளுடன் இளைய தலைமுறையினரைத் தயார்படுத்தி, கல்வி முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதே இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

More Read

அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளிப் பொறியியல் மற்றும் ஏனைய துறைசார் பிரிவுகள் உள்ளடங்கலாக, இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வளர்ந்து வரும் மற்றும் முன்னணித் துறைகளில் ஆராய்ச்சிப் பங்காளித்துவங்களையும் கல்விசார் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்துப் பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், இலங்கைக்குள்ளேயே தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இதன்மூலம் மாணவர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

இத்தகைய பங்காளித்துவங்களின் ஊடாகக் கற்கை நெறிகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் சர்வதேச அனுபவங்களிலிருந்து இலங்கை மாணவர்கள் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கும் இரு தரப்பினரும் தமது இணக்கத்தை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் சேர் நிஷான் கனகராஜாவின் பாரியார் தபிதா கனகராஜா, இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அப்சரா கல்தேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வலுப்படுத்த வேண்டும் – காவிந்த ஜயவர்தன
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

“கானி” புயல் தொடர்பில் எச்சரிக்கை!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Local

வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

Local Politics

மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

Local Politics

இலங்கைக்கு வர ETA அனுமதி தேவையில்லை

Politics

கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Just in Local

அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.