எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் (தாங்கி) ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவைச் சுற்றியுள்ள ரிங் ரோட் (Ring Road) அதிவேக நெடுஞ்சாலை, கிசா மாகாணத்தின் அல்-வாராக் (Al-Warraq) பகுதியில் எரிபொருள் தாங்கி கவிழ்ந்து தீப்பற்றியதில், அருகிலிருந்த 27 வாகனங்கள் வரை தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 39 அவசர மருத்துவ வாகனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
