தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சில வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்மட்டம் அதிகரிப்பதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
