Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Sunday, Nov 22, 2026
Hot News
அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!
செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் – அர்ச்சுனா Mp!
மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம் – அரசாங்கத்தின் புதிய திட்டம்!
காவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு – சுற்றாடல் அமைச்சரின் கருத்து!
30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
சாதாரண மக்கள் இப்பொது மிகவும் கஷ்டப்படுகிறார்கள் – கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் : ரிஷாத் பதியுதீன் கவலை
வவுனியாவில் டெங்கு தீவிரம் – பொதுமக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!
வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
4 பில்லியன் நிதி மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல்!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Wolrd

ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்!

Shahny Mohamed
Last updated: November 2, 2026 12:36 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
2 Min Read
SHARE


உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்.

ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு
ஆப்பிரிக்க கண்டத்தில் தனது பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை மாஸ்கோ மிக பிர மாண்டமாக நடத்தி வருகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க நாடான கானாவுடன் ரஷியா கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அணுசக்தி திட்டங்கள்
இதன்படி, கானா நாட்டின் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பிரமாண்ட அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை கானா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சாமுவேல் ஒகுட்ஸெட்டோ அப்லக்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷியாவின் அணுசக்தி நிறுவனமான ‘ரோசாட்டம்’ கானா உள்பட மேலும் 4 ஆப்பிரிக்க நாடுகளுடன் இதுபோன்ற அணுசக்தி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அணுசக்தி மட்டுமல்லாது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்தவும் புதிய பாதுகாப்புப் படை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆயுதங்கள்
இதன் மூலம் கானா ராணுவத்துக்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ரஷியா வழங்கவுள்ளது. அதே நேரத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் ரஷியா தரப்பில் தன்னார்வலர்களாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு மூலமாகவோ பங்கேற்கக் கூடாது என ரஷிய அதிபர் புதின் தடை விதித்துள்ளார். இது சர்வதேச அரங்கில் கானா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

More Read

தாக்குதல் இடம்பெறாது என்ற உத்தரவாதம் இன்றி எந்தவொரு ஒப்பந்தமும் சாத்தியமில்லை!
33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு!
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
🇮🇱 பிரதமர் பதவியை இழக்கும் நெதன்யாகு!

கல்வி உதவித்தொகை
மேலும், கானா நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், ரஷியாவில் தங்கிப் படிக்கும் கானா நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கல்வி உதவித்தொகைகளை வழங்கவும் ரஷியா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article துறைமுகத்தில் இறக்கப்படும் விலையில் எரிபொருள் கிடைத்தபாடில்லை!
Next Article 341 ரன்கள்… பில் சால்ட்டின் உலக சாதனையை உடைத்த கிளென் பிலிப்ஸ்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

அரசியல்வாதிகளின் நிதியமாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கான நிதியமாக மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Related News
Just in Politics

இஸ்ரேலில் விறு விறு வாக்குப்பதிவு! – ஆட்சி மாற்றம் சாத்தியமா?

Breaking Politics

BREAKING | பரபரப்பான பிரேசில் அதிபர் தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!

Politics Wolrd

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்!

Breaking Just in

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

Business & Economy Just in

கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

  • Quick Links:
  • Just in
  • Local
  • Politics
  • Wolrd
  • Breaking
  • Sports
  • இலங்கை
  • Uncategorized
  • உலகம்
  • செய்திகள்
  • இந்தியா
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.