Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்
ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
உலகம்

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்!

Shahny Mohamed
Last updated: November 27, 2026 8:49 am
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.

சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்ட மறுநாளே இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

More Read

கைக்குழந்தையுடன் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமன்
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
இன்று இரவு வானில் ஜொலிக்கும் அற்புதமான ‘பீவர் சூப்பர் மூன்’!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி பங்களாதேஷ் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

யேமன் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு நகரமான ஜசானில் அமைந்துள்ள இந்தச் சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு சுமார் 4 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளம் ஒன்றை, யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுக நகரில் வைத்து அழித்துவிட்டதாக சவூதி கூட்டணி அறிவித்துள்ளது.

More Read

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த கப்பல்!

பொதுமக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதற்குக் கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அந்தக் கூட்டணி எச்சரித்துள்ளது.

முன்னதாக, சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ராஸ் தனுரா (Ras Tanura) மற்றும் செங்கடல் துறைமுகங்களான ஜெட்டா, ஜசான் ஆகியவற்றின் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியிருந்தனர்.

எனினும், ராஸ் தனுரா வான்பரப்பில் 4 ஆளில்லா விமானங்களையும், ஜெட்டா துறைமுகத்திற்கு அருகே ஒரு ஆளில்லா விமானத்தையும் தமது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவூதி கூட்டணி கூறியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாகக் கடந்த ஜூலை மாதம் யேமனில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் சனா உள்ளிட்ட யேமனின் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்களால் சவூதி அரம்கோ நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதுடன், ரியாத் நகருக்கான பெரும்பாலான சர்வதேச விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.

மேலும், ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டி மற்றும் முக்கிய முதலீட்டு மாநாடு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளைச் சவூதி அரேபியா ஒத்திவைக்கவோ அல்லது இரத்து செய்யவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் யேமனின் செங்கடல் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய ஹூதிகள், வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையை நோக்கி முன்னேறியதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

Share This Article
Email Copy Link Print
Previous Article நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
Next Article போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானம்!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.