Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்!
காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து:11 பேர் காயம்
குக் தீவுகளில் சிக்கிய இலங்கைப் பெண்ணை நாட்டுக்கு அழைத்து வர நியூசிலாந்தின் உதவியை நாடிய இலங்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க!
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Friday, Nov 27, 2026
Hot News
கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்!
காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து:11 பேர் காயம்
குக் தீவுகளில் சிக்கிய இலங்கைப் பெண்ணை நாட்டுக்கு அழைத்து வர நியூசிலாந்தின் உதவியை நாடிய இலங்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க!
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
இலங்கை

காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு

Shahny Mohamed
Last updated: November 27, 2026 4:51 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘Clean Sri Lanka’ தேசிய  திட்டத்தின் மற்றுமொரு முக்கிய கட்டமாக, காத்தான்குடி நகர சபை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட  திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை (Material Recovery Facility – MRF) திறந்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நேற்று (26) காத்தான்குடி நகர சபை வளாகத்தில் நடைபெற்றது.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்க ரீதியாகத் தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘Clean Sri Lanka’ தேசியத் திட்டத்திற்கு அமைவாக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய காத்தான்குடி நகர சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

More Read

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்!
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க!

வெளியேற்றப்படும் உக்காத கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம், அவை சுற்றுச்சூழலில் முறையற்ற விதத்தில் கொட்டப்படுவதை மட்டுப்படுத்துவதே மேற்படி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை நிர்மாணிப்பதன் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சூழல் மாசடைவதைக் குறைத்தல், கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை மீண்டும் வழங்குதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவாக சுழற்சி முறை பொருளாதாரத்தைக் (Circular Economy) கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்தல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

More Read

அக்குறணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
தென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்
பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் மீட்பு!

மேலும், கழிவு முகாமைத்துவத்தின் போது குறைத்தல் (Reduce), மீளப் பயன்படுத்துதல் (Reuse) மற்றும் மீள்சுழற்சி செய்தல் (Recycle) ஆகிய 3R எண்ணக்கருவை  நடைமுறையில் செயற்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கமைய, வீடுகளிலிருந்து முறையாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடி உள்ளிட்ட மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து, முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் இந்நிலையத்தின் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

பிரதேச மக்களின் முழுமையான பங்களிப்புடன் தூய்மையானதும் ஆரோக்கியமானதுமான சூழலை உருவாக்குவதும், உள்ளூராட்சி சபைகளின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

More Read

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போலி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி – இளைஞர் கைது!
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
அடுத்த ஆண்டு கடன் வட்டியாக 4,850 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் ; 3,800 பில்லியன் ரூபா கடன் பெற எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

அதற்கமைய, காத்தான்குடி பிரதேசத்தில் நிலையான கழிவு முகாமைத்துவ முறையொன்றை நிறுவி, தூய்மையான நகரச் சூழலையும் மேலும் பொறுப்புணர்வுள்ள சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை
Next Article கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Politics இலங்கை

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள்

Local இலங்கை

ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் – தவணைப் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

Politics இலங்கை

நாட்டின் கரும்புத் துறையை மேம்படுத்த பிரேசில் உதவி

Local இலங்கை

வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்துப் பாதிக்கும் அபாயம்

Local Politics

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு டிசம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Uncategorized
  • Wolrd
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • Business & Economy
  • சமூகம்
  • செய்திகள்
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.