வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
