செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டைத் தாம் ஒப்புக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, குறித்த குற்றச்சாட்டைப் பிரதிவாதி ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.
