Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

அனோஜனை விடுவித்த ஜனாதிபதியால் ஞானசார தேரரை ஏன் விடுவிக்க முடியாது?

Shahny Mohamed
Last updated: November 24, 2026 6:03 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

“சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனோஜனை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேரடியாகத் தலையீடு செய்ய முடியுமாயின், ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்ய முடியாது? அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி செயற்படுகிறார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,000 மில்லியன் ரூபாய் (2 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அந்த ஒதுக்கீடு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரச நிதியைச் சேமித்துள்ளோம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்காது.

பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக அரசு குறிப்பிடுகின்றது. இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் நாட்டுக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் பின்னணியை அரசு இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் சம்பவத்தை அரசு முன்கூட்டியே அறிந்திருந்ததா என்பது எமக்குத் தெரியவில்லை.

More Read

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்

வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் இதே விடயமே குறிப்பிடப்பட்டது. இருப்பினும், எந்தவோர் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.

சீனாவுடன் விசேட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன என்று அரசு குறிப்பிட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தங்களுக்கு அமைய எவ்வித அபிவிருத்திக் கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கு முன்னர் சீனா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

சவூதி அரேபியாவில் மத அவமதிப்புக் குற்றத்துக்கான மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையரான அனோஜனைப் பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. அவரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சவூதி அரசிடம் வலியுறுத்தினார். அதற்கமைய, அனோஜன் சிவராசா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

More Read

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து அனோஜன் சிவராசா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பௌத்த நாடான இலங்கையில் ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article செல்வந்தர்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்குத் துணை நிற்போம் – சம்பிக்க ரணவக்க
Next Article இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in Local

கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!

Just in Local

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Local Politics

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

Just in

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.