Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Monday, Nov 23, 2026
Hot News
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!
நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
நாட்டை சீரழிக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு : இதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை – எம்.பி கந்தசாமி பிரபு
செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதற்றம் – விரிவான பொதுமக்கள் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

Shahny Mohamed
Last updated: November 23, 2026 2:27 pm
By
Shahny Mohamed
ByShahny Mohamed
Follow:
Share
3 Min Read
SHARE

முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA) தொடர்பில் விரிவான பொதுமக்கள் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, அது குறித்த இறுதி முடிவு எதனையும் எடுக்கக்கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (23) பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும், கடந்த நவம்பர் 7ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே குறித்த சட்டமூலம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் தானும் இணைந்து சபாநாயகருக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

More Read

புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கடுகண்ணாவையில் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடப்படும்!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

அதில், குழுவின் கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு அனுமதிக்குமாறும், எனினும் இறுதி முடிவொன்றை எடுப்பதைத் தவிர்க்குமாறும் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவான பிரதிநிதிகளுக்கு இந்த ஆலோசனைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட சாணக்கியன், குழு இறுதி முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர் அவர்களும் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆராய்ந்துள்ளதாகவும், இருப்பினும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

More Read

செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும்!
நாங்கள் நிரபராதிகள் – யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறகுகிறார் பைசர் முஸ்தபா – டிசம்பர் 5ம் திகதி சென்னை பயணம்.
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் தடுப்புக்கு விசேட வேலைத்திட்டம்

குறித்த ஆலோசனைக் கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் தாமாகவே அதில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், மேலதிகமான கவலைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின் அவற்றை துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகரின் தீர்ப்பின் மூலம் முடிவெடுப்பதை விட, துறைசார் மேற்பார்வைக் குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றும் நீதியமைச்சர் வலியுறுத்தினார்.

இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விடயம் குழு மட்டத்திலேயே கையாளப்பட வேண்டும் என்றும், இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும், தனது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திய சாணக்கியன் இராசமாணிக்கம், 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) சுட்டிக்காட்டி, அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றம் மிகவும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எச்சரித்தார்.

சட்டமொன்று நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்வதற்கான பொறிமுறை பாராளுமன்றத்தில் இல்லை என்றும், எனவே சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரான கட்டத்திலேயே விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார்.

இதனால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த நிலையில், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

More Read

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்
மில்லனிய பிரதேச சபையின் பாதீடு – உறுப்பினர்களின் கைகலப்புக்கு மத்தியில் நிறைவேற்றம்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரமீஸின் காதி நீதிபதி நியமனத்துக்கு பிரதி சபாநாயகர் சிபாரிசு செய்தாரா?

இதன்போது தலையிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்த விவகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுவுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நீதியமைச்சரின் நிலைப்பாட்டை நிராகரித்தார்.

குறித்த குழு பாராளுமன்றத்தினால் நிறுவப்பட்ட ஒன்று என்பதால், இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது என அவர் வாதிட்டார்.

அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விடயம் துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article புதிய பொலிஸ் சீருடை – சமூக ஊடகங்களில் வைரலாகும் வடிவமைப்புகள் – அமைச்சர் விளக்கம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

- Advertisement -
Ad image
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.