Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
ரியாத் வர்த்தகக் கோபுரம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல் – 11 பேர் காயம்
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocalPolitics

அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துங்கள் – ஜனாதிபதி!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 7:46 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நிதியாண்டின் ஆரம்பம் முதலே அமைச்சுக்களும் நிறுவனங்களும் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடன் உறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

More Read

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
இயந்திரக் கோளாறால் செயலிழந்த சரக்குக் கப்பலுக்கு பாதுகாப்பான தஞ்சமளித்த அம்பாந்தோட்டை துறைமுகம்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை!

அவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் திறைசேரிக்குத் திரும்புவதால், அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், பெரும்போக நெல் அறுவடையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் களஞ்சியசாலைகளில் எஞ்சியுள்ள நெல் கையிருப்புகளை அடுத்த பெரும்போக அறுவடை கிடைப்பதற்கு முன்னர் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

More Read

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்

நெல் கையிருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வரிச் சலுகைகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போது முதலீட்டாளர் ஒருவருக்கு காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, அரச காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலீட்டுச் சபையின் கீழ் அல்லது விசேட காணி வங்கியொன்றின் கீழ் ஒப்படைத்து, முதலீட்டின் அளவு, வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் துரிதமாகக் காணிகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, கிரிப்டோகரன்சி ஒழுங்குபடுத்தல், காப்புறுதி மற்றும் கொடுக்கல் வாங்கல் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Read

இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டா நீதிமன்றுக்கு!
கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!
Share This Article
Email Copy Link Print
Previous Article சாதி குறிப்பிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை! – அமைச்சர் சரோஜா பவுல்ராஜின் அலுவலகம் மறுப்பு!
Next Article யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சர் சுசில் ரணசிங்க
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in Local

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Local Politics

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

Just in

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Just in Local

2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

Just in Local

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.