கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான பாலோன் டி ஆர் விருது வழங்கும் விழா லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பிராங்பேர்ட் மற்றும் பேயர்ன் மியூனிக் அணியின் நட்சத்திர வீரரான இங்கிலாந்தின் ஹாரி கேன் (Harry Kane) முதன்முறையாக ஆண்கள் பிரிவில் பாலோன் டி ஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு மைக்கல் ஓவெனுக்குப் பிறகு இந்த விருதை வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் கிலியன் எம்பாப்பே இரண்டாவது இடத்தையும், இளம் வீரர் லேமின் யமால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் லியோனல் மெஸ்சி ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
பெண்கள் பிரிவில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீராங்கனை அலெக்சியா புடெல்லாஸ் (Alexia Putellas) தனது மூன்றாவது பாலோன் டி ஆர் விருதை வென்று அசத்தியுள்ளார்.
அத்துடன், உலகின் சிறந்த இளம் வீரருக்கான கோபா விருதை (Kopa Trophy) தொடர்ந்து மூன்றாவது முறையாக பார்சிலோனா அணியின் இளம் வீரர் லேமின் யமால் தட்டிச் சென்றார்.
