வரி செலுத்துவோர் அடையாள இலக்கங்கள் (TIN) மற்றும் தனிநபர் அடையாள இலக்கங்களை (PIN) வழங்குவதற்காக இந்த வார இறுதி நாட்களில் தமது அலுவலகங்கள் திறந்திருக்கும் என வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் இவ்வாறான சேவைகளை வழங்குவதற்குத் திணைக்களத்தினால் விசேட ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தமது குறித்த இலக்கங்கள் உள்ளிட்ட ஏனைய வரி தொடர்பான சேவைகளை வழமையான வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களிலும் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
