Short News
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Facebook Instagram Youtube Tiktok
Wednesday, Nov 25, 2026
Hot News
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டா நீதிமன்றுக்கு!
கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!
தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை
ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

Search
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics
Have an existing account? Sign In
Follow US
© 2026 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Just inLocal

இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையுடன் கூடிய மின்னல் எச்சரிக்கை!

Shahny Mohamed
Last updated: November 25, 2026 3:09 pm
Shahny Mohamed
Share
2 Min Read
SHARE

இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (25) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) மட்டத்திலான மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், அடுத்த அறிவிப்பு மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

More Read

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் தாழிறக்கம்
கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டா நீதிமன்றுக்கு!
கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி!

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் திறந்தவெளிகளில் இருப்பவர்களுக்கு பாரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், வெளிப்புற வேலைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொதுநிகழ்வுகள் ஆகியவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்குச் சேதம் ஏற்படுவதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் தடைப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

More Read

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை
ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்- முதலமைச்சரால் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

மேலும், பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
– இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது விளையாட்டு, நிர்மாணப் பணிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட வெளிப்புறச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவும் அல்லது ஒத்திவைக்கவும்.
– பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட கூரையைக் கொண்ட வாகனங்களுக்குள் உடனடியாகச் செல்லவும்.
– கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
– தனிமையான மரங்கள், கூடாரங்கள், திறந்த கொட்டகைகள் மற்றும் முழுமையாக மூடப்படாத கட்டமைப்புகளின் கீழ் தஞ்சமடைய வேண்டாம்.
– இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்சார உபகரணங்கள், நீர்க்குழாய் இணைப்புகள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்ட மின்சாரக் கட்டமைப்புகளிலிருந்து விலகியிருக்கவும்.
– சிறுவர்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படக்கூடிய நபர்களை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கோட்டாபயவின் வௌிநாட்டு பயணத் தடையை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!
Next Article வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை வென்றது இலங்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
TiktokFollow
Most Read

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் – டிரம்ப் சொல்கிறார்

டிரம்ப் அறிவுறுத்தலை மீறி மின்நிலையம் மீது ரஷியா தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

விராட் கோலி அதிருப்தியுடன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் தங்கம் வென்று அசத்தல்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

பிரீமியர் லீக் – லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

அதிவேக 2,000 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா

கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

- Advertisement -
Ad image
Related News
Just in Local

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை!

Local

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படலாம்

Local

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Local Politics

மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

Local இலங்கை

இன்றும் பல இடங்களுக்கு 100மிமீ பலத்த மழை!

  • Quick Links:
  • Local
  • Just in
  • Politics
  • இலங்கை
  • Wolrd
  • Uncategorized
  • Breaking
  • Sports
  • உலகம்
  • இந்தியா
  • செய்திகள்
  • சமூகம்
  • Business & Economy
Short News
STAY INFORMED. SAVE YOUR TIME. The latest news, simplified into short and easy updates.
Main Menu
  • Home
  • Local
  • Wolrd
  • Sports
  • Politics

© Short News Network. Design by Rajai Mohamed . All Rights Reserved.