தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.
027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாகிய நிலையில் தோல்வி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலொன்ன பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பிரதேச சபையின் தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் இன்று (25.11.2026) சபையில் முதன்முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்திருந்தது.
கொலொன்ன பிரதேச சபையில் எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் ஆளுங்கட்சிக்கு 9 ஆசனங்களும் உள்ளன.
எவ்வாறாயினும் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று குறைந்த ஆசனங்களை வென்றிருந்த தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
