Our Feeds


Thursday, April 3, 2025

Zameera

இலங்கைக்கு பயணம் குறித்து பிரதமர் மோடியின் x தள பதிவு


 இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள  இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.


 அதில், இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் நடைபெறுகிறது.


பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.


அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன். என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »