Our Feeds


Sunday, April 6, 2025

SHAHNI RAMEES

நீதி வேண்டும்! - பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் நினைவு தின நிகழ்வில் சஜித்.... #PHOTOS

 

பலவந்தமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து  நினைவு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன் பொருட்டு, கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வொன்று இன்று (06) கொழும்பு காலை  06 இல் அமைந்துள்ள மரைன் கிராண்ட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஏற்பாட்டுக்குழுவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு தனது வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்தார். 

இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் சில அரசியல் தலைவர்கள் அன்று முஸ்லிம்களின் உரிமைகளுக்காக முன்நிற்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இந்த உரிமைக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்தது.

அடிப்படை மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆறாத வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »