Our Feeds


Sunday, April 6, 2025

SHAHNI RAMEES

வெலிக்கடை OICயின் பதவிக்கு ஆப்பு!


 வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பரிந்துரைகள் தேசிய பொலிஸ் ஆணைகுழுவுக்கு சமர்ப்பிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்க 


தேசிய பொலிஸ் ஆணையத்திடம் சமர்ப்பிப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (6) பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். 


மேலும், இந்த சம்பவத்தில் கடமை தவறியதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 1ஆம் திகதி இரவு, நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டு, பின்னர் ஒழங்கீனமான நடத்தை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்தார். 


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 


சம்பவம் தொடர்பாக நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரைகளை பதில் பொலிஸ்மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »