பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய நாட்டின் இரு அமைச்சர்களை இஸ்ரேல் பொலிஸார் தடுத்து வைத்ததை முற்றிலும் ஏற்க முடியாதது என்று பிரித்தானியா கண்டித்துள்ளது.
இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு அருகில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரித்தானியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த யுவான் யாங், மற்றும் அப்திசாம் முகமது ஆகியோர் லண்டனில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி கூறியதாவது:
இஸ்ரேல் எங்கள் நாட்டு அமைச்சர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இஸ்ரேலிய அரசாங்கத்தில் உள்ள எனது சகாக்களுக்கு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இப்படி நடத்தக்கூடாது என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன், மேலும் எங்கள் ஆதரவை வழங்குவதற்காக நேற்றிரவு (6) இரு அமைச்சர்களையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.
இஸ்ரேல் எடுத்த போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கும், , பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் கவனம் தொடர்கிறது. இந்நிலையில் இது சர்வதேச விதிமுறைகளின் மீறல் ஆகும். என்று அவர் கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேல் எடுத்த இந்த நடவடிக்கையில் தாங்கள் வியப்படைந்ததாக அந்த இரண்டு எம்.பி.க்களும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.