Our Feeds


Monday, April 7, 2025

Zameera

IMF நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேசimf நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »