Our Feeds


Thursday, April 3, 2025

SHAHNI RAMEES

Don't worry - டிரம்பின் வரி அறிவிப்பு குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர இது அச்சப்படவேண்டிய தருணமில்லை என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வரிகட்டமைப்பு ஒருஇரவில் ஏற்படுத்தப்பட்டதல்ல,இது கடந்த காலகொள்கை வழிகாட்டுதல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை பிரதிபலிக்கின்றது.

ஆனால் இதற்கு சிந்தனையுடன் சீராக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காணும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

உலகளாவிய சந்தையில் தங்கள் இடத்தை பெறுவதற்கு எங்கள் ஏற்றுமதியாளர்கள் ,தொழிலாளர்கள், தொழில்முனைவோர்,எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த அரசாங்கம் அந்த முயற்சிகளை பாதுகாப்பதற்கான அனைத்தையும், அவதானமான இராஜதந்திர முயற்சிகள்,நடைமுறை செயற்பாடுகள்,எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படுதல் ,போன்றவற்றின் மூலம் செய்யும்.

நாங்கள் எங்கள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்.

இது அச்சப்படவேண்டிய தருணம் இல்லை,இது கவனத்தை குவிக்கவேண்டிய தருணம்,நாங்கள் கவனம் செலுத்திவருகின்றோம்.

இலங்கை  அமைதியாக,நம்பிக்கையுடன் இணைந்து முன்னேறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »