Our Feeds


Wednesday, April 2, 2025

Zameera

மியன்மார் நிலநடுகத்தில் பத்தாயிரம் கட்டிடங்கள் சேதம்


 மியன்மாரில் கடந்த 28ஆந்திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

 

 

இதற்கிடையே நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் காணமலாகியுள்ளதாகவும் மியன்மாரின் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 


இந்த நிலையில் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


பல இடங்களில் கனரக இயந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டடிட இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உட்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டது.

 


இந்த நிலையில் மியன்மாரில் நிலநடுக்கத்தால் நீர் விநியோகம், சுகாதார உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


சுவாசத் தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »