Our Feeds


Monday, April 7, 2025

Zameera

இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது


 இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி நாட்டுக்கு வந்தார் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் விரும்பும் விதத்தில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியாது.

இந்த அரசாங்கம் நாட்டின் உரிமையாளர்கள் இல்லை. பொறுப்பாளர்கள் மாத்திரமே.

எனவே, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாட்டின் பொறுப்பாளர்களுக்கு இல்லை.

எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பே முக்கியமாகும்.

ஜெனீவா கூட்டத்தொடரில்கூட ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே எமக்கு ஆதரவாக செயற்பட்டன. இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. அவ்வாறான நாடோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் ஏனைய நாடுகள் அநீதிக்குள்ளாகும்.

இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »